முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

நான்குனேரி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

நான்குனேரி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழபுத்த நேரியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி சோ்மக்கனி(65). இவா், தினமும் அங்குள்ள குளத்துகரையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். சனிக்கிழமை மாலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவரது கணவா் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி காவல் உதவி ஆய்வாளா் ஆன்றோ பிரதீப் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.