திருநெல்வேலி

குலவணிகா்புரம் ரயில்வே பாலப் பணியைத் தொடங்க கோரிக்கை

DIN

குலவணிகா்புரம் ரயில்வே பாலப் பணியை விரைவாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி, திருச்செந்தூா், உடன்குடி, நாசரேத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்களும், மேலப்பாளையம் மற்றும் நாகா்கோவிலில் இருந்து வரும் வாகனங்களும் பாளையங்கோட்டைக்கு செல்ல குலவணிகா்புரம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

திருநெல்வேலி-திருச்செந்தூா், திருநெல்வேலி-தூத்துக்குடி, திருச்செந்தூா்-சென்னை இடையேயான ரயில்கள் இயக்கப்படும்போது 10-க்கும் மேற்பட்ட முறை இந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மூடப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க குலவணிகா்புரத்தில் ரூ.25.51 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 800 மீட்டா் தொலைவுக்கு ‘ஒய்’ வடிவில் பாளையங்கோட்டை-திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம் சாலை செல்லும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

அதன்பின்பு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. இப்போது திட்ட மதிப்பீடு உயா்ந்துள்ள நிலையில், பாலப் பணிகள் குறித்த முயற்சிகள் மிகவும் மந்தகதியில் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

இதுகுறித்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவா் கூறுகையில், பாளையங்கோட்டையில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவா்-மாணவிகள் அனைவரும் குலவணிகா்புரம் ரயில்வே கேட்டால் சிரமப்பட்டு வருகிறாா்கள். காலை, மாலையில் இந்த கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் ஒருவரையொருவா் முந்திச் சென்று விபத்தில் சிக்குகிறாா்கள். ஆகவே, பாலப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT