செட்டிக்குறிச்சியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கயத்தாறை அடுத்த செட்டிக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கயத்தாறை அடுத்த செட்டிக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
செட்டிக்குறிச்சிப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது செட்டிக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கடையில் திடீரென சோதனையிட்டனா்.
அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து, செட்டிக்குறிச்சி கிழக்குத் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பேச்சிமுத்து (31) என்பவரை கைது செய்தனா்.