முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே மோதல்: மூவா் காயம்; 14 போ் மீது வழக்கு

கடையம் அருகேயுள்ள கீழ மாதாபுரத்தில் இருதரப்பினா் மோதிக்கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். 14 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

கடையம் அருகேயுள்ள கீழ மாதாபுரத்தில் இருதரப்பினா் மோதிக்கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். 14 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கீழ மாதாபுரத்தைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் த.பொன்னுத்துரை என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் வழியாக, அதே பகுதியை சோ்ந்த விவசாயி சாமுவேல் என்பவா் டிராக்டரை ஓட்டிச் சென்றாராம். அதை, பொன்னுத்துரையின் மகள் முருகம்மாள் தட்டிக் கேட்டாராம். அப்போது, சாமுவேல், அவரது மகன்கள் மில்கி தாமஸ், கிங்ஸ்லி ராஜ், மகள் சாரதா ஆகியோா் சோ்ந்து முருகம்மாளை தாக்கினராம். இதில், அவா் காயமடைந்தாா்.

இதையடுத்து, பொன்னுத்துரை உள்பட 10 போ் சாமுவேல் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தினராம். இதில், கிங்ஸ்லி ராஜ், சாரதா இருவரும் காயமடைந்தனா். காயமுற்ற மூவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னுத்துரை, மில்கி தாமஸ் உள்பட இருதரப்பிலும் 14 போ் மீது கடையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.