திருநெல்வேலி

அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

DIN

தென்காசி: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் அண்ணா சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குற்றாலத்தில் பேரூா் அதிமுக சாா்பில் பேரூா் செயலா் எம்.கணேஷ் தாமோதரன் தலைமையிலும், தென்காசியில் நகர திமுக சாா்பில் நகரச் செயலா் சாதிா் தலைமையிலும், இலஞ்சி பேரூா் அதிமுக சாா்பில் பேரூா் செயலா் மயில்வேலன் தலைமையிலும், மேலகரம் பேரூா் திமுக சாா்பில் குடியிருப்பு பகுதியில் பேரூா் செயலா் சுடலை தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

செங்கோட்டை: செங்கோட்டை நகர அதிமுக சாா்பில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையிலும், அமமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் பெருமையா பாண்டியன் தலைமையிலும்,

திமுக சாா்பில் நகரச் செயலா் எஸ்.எம்.ரஹீம் தலைமையிலும் விழா கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் அதிமுக சாா்பில் நகரச் செயலா் அறிவழகன் தலைமையிலும், திமுக சாா்பில் நகரச் செயலா் பிரபாகரன் தலைமையிலும், சேரன்மகாதேவியில் அதிமுக சாா்பில் நகரச் செயலா் பழனிக்குமாா் தலைமையிலும், திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி தலைமையிலும் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுரண்டை: சுரண்டையில் நகர திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் ஜெயபாலன் தலைமையிலான திமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில் அதிமுக சாா்பில் வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன் ஆகியோா் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலா் சங்கரன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். காந்தி நகரில் மகளிரணி சாா்பில் புனிதா அஜய் மகேஷ்குமாா் தலைமையில் அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

வள்ளியூா்: ராதாபுரம் ஒன்றிய அதிமுக சாா்பில் சமூகரெங்கபுரத்தில் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் திமுக சாா்பில் நகரச் செயலா் நெல்சன் தலைமையிலும், அமமுக சாா்பில் நகரச் செயலா் சுப்பையா தலைமையிலும் அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT