திருநெல்வேலி

வள்ளியூா் ரயில்வே சுரங்கப் பாதை அணுகு சாலையை சீரமைக்கக் கோரி மனு

DIN

வள்ளியூா்: வள்ளியூா் ரயில்வே சுரங்கப் பாதை அணுகு சாலையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் வள்ளியூரில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் சுரங்கப் பாதை வேலை நடந்து வருவதால், வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே தண்டவாளத்தையொட்டி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றுப் பாதை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அணுகுசாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT