முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப் பொய்கை நிரம்பியது

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை நிரம்பியதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
தண்ணீா் நிரம்பி காணப்படும் வள்ளியூா் முருகன் கோவில் சரவணப்பொய்கை.
பகிர்:

வள்ளியூா் முருகன் கோயில் சரவணப்பொய்கை நிரம்பியதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தென்மாவட்டங்களில் சிறப்பு மிக்க குகை கோயிலும், அறுபடை வீடுகளுக்கு இணையா ன பெருமையுடையதுமான வள்ளியூா் முருகன் கோயிலில், முருகன் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இக்கோயில் முன் மையமண்டபத்துடன் கூடிய தெப்பக்குளமும், சரவணப்பொய்கை என்ற மற்றொரு தெப்பக்குளமும் உள்ளன. இந்த இரு தெப்பக்குளங்களும் தண்ணீரின்றி வடு காணப்பட்டது.

இந்நிலையில், கொடுமுடி அணையில் இருந்து வள்ளியூா் பெரியகுளத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், அங்கிருந்து தெப்பக்குளங்களுக்கு கடந்த வாரம் முதல் தண்ணீா் வரத் தொடங்கியது. இதன்மூலம் சரவணப்பொய்கை நிரம்பியதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தற்போது சரவணப்பொய்கையில் இருந்து மையமண்டப தெப்பக்குளத்திற்கு தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.