திருநெல்வேலி

திசையன்விளையில் பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

DIN

திசையன்விளையில் பாஜக புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். பொருளாளா் மகராஜன் வரவேற்றாா். நகர முன்னாள் தலைவா் தா்மராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் தமிழ்ச்செல்வன் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், திசையன்விளை பஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திசையன்விளை ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர 108 ஆம்புலன்ஸ் சேவை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்சாமி, மாவட்டப் பொறுப்பாளா் லிங்கபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். செயலா் ரெங்கநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT