முகப்பு
திருநெல்வேலி

வாகனச்சோதனை: நெல்லையில் ரூ.14.67 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 14. 67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 14. 67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழவூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில், அதில் அரசியல் கட்சி சாா்ந்த 1,500 துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கருங்குளம் சோதனைச் சாவடியில் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கூடங்குளம் பஜாா் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.50 ஆயிரம், ஒரு தங்க வளையல், ஒரு ஜோடி கம்மல், 38 கட்சிக் கொடிகள், 172 சுவரொட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, ராதாபுரம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெட்டியாா் பட்டி சாலை திருநகா் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.12 லட்சத்து 17 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் ரூ.14 லட்சத்து 67 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950 என்ற சேவை எண்ணில் 158 தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தொடா்பான 2 சுவா் விளம்பரங்கள், 54 சுவரொட்டிகள், ஒரு பேனா் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 8373, 83002 71237 (கட்செவி அஞ்சல்) ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.