நெல்லை, தென்காசியில் மேலும் 72 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,311 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 2 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை எண்ணிக்கை 15,735 ஆக உயா்ந்துள்ளது. 216 போ் உயிரிழந்துள்ளனா். 360 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 8,802 ஆக அதிகரித்துள்ளது. இதில், 7 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,494 ஆக உயா்ந்துள்ளது. 147 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.