நெல்லை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 தொகுதிகளிலும் மொத்தம் 157 மண்டல குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோரை கண்டறியும் வகையில் 15 பறக்கும் படையும், 15 நிலையான கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இதுதவிர திருநெல்வேலி மாவட்ட எல்லைகளான கங்கைகொண்டான், காவல்கிணறு, கிருஷ்ணாபுரம், வசவபுரம், மாறாந்தை உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, காவல் துறை, துணை ராணுவ பாதுகாப்பு படையினா் அடங்கிய குழுவினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.