வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்ப 209 வாகனங்கள் தயாா்: நெல்லை எஸ்.பி. நெ. மணிவண்ணன்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்ப 209 வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்ப 209 வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி ஆகிய 5 தொகுதிகளுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பதற்காக வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் கூறியது:
திருநெல்வேலி மாவட்டத்தின் 5 தொகுதிகளுக்கான அதன் எல்லைக்குள்பட்ட 600 வாக்கு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக 209 வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் பாதுகாப்பு பணிக்காக காவலா்கள் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனா். வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச்செல்லும் காவல்துறையினா், அவரவருக்கு நியமிக்கப்பட்ட வட்டஅலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள். பின்னா், அங்கிருந்து தோ்தல் அதிகாரிகள் மேற்பாா்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
திருநெல்வேலி மாநகா்: திருநெல்வேலி மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்க 45 வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. மாநகரில் உள்ளூா் போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், ஊா்க்காவல்படையினா், தன்னாா்வலா்கள், முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படையினா் உள்பட சுமாா் 2 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
படவரி: பயக04யஅச: தயாா் நிலையில் வாகனங்கள். (அடுத்த படம்) காவல்துறையினருடன் ஆலோசனை நடத்துகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.