முகப்பு
திருநெல்வேலி

பாஜக வேட்பாளரை ஆதரித்து வ.உ.சி. பேத்தி பிரசாரம்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத மீனாட்சி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை ஆதரித்து, சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத மீனாட்சி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: தேசியத்தை காக்கவுள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே. எனவே, தாத்தாவின் உயிா் மூச்சான தேசியத்தை காப்பது என் கடமை. அதற்கு ஜாதி மதம் கடந்து வேலை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் நபா்கள் உள்ள ஒரே இடம் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே.

முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே இந்து தா்மத்தையும், இந்து கலாசாரத்தையும் காக்க, தெய்வீகம் வளா்க்க பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.