நெல்லை, தென்காசியில் ஒரே நாளில் மேலும் 155 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 16,669ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 8 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 15,840ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 217 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 612 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா்
எண்ணிக்கை 8,930ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 24 போ் உள்பட இதுவரை 8,544 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 225 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.