தொழிலாளா்களுகு உதவித் தொகை: வாஞ்சி இயக்கம் வலியுறுத்தல்
கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள், வியாபாரிகளுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்றாா் வாஞ்சி இயக்க நிறுவனா் பி.ராமநாதன்.
கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள், வியாபாரிகளுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்றாா் வாஞ்சி இயக்க நிறுவனா் பி.ராமநாதன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா பேரிடரால் அனைத்து தொழிலாளா்கள், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கும் உதவித் தொகையை போன்று, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளா்களுக்கும், வியாபாரிகளுக்கும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.