திருநெல்வேலி

பாளை மத்திய சிறையில் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

நான்குனேரி அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ (27). இவா், கடந்த 22 ஆம் தேதி பாளையங்கோட்டையில் கைதிகளுக்குள் நடத்த மோதலில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளா் அணில்குமாா் தலைமையிலான போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை விசாரணை நடத்தினா். சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள், முத்துமனோவுடன் வந்த கைதிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே முத்துமனோவின் உடலைப் பெற அவரது உறவினா்கள் 7 ஆவது நாளாக புதன்கிழமையும் மறுத்தனா். இச் சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகளை உடனே கைது செய்யவேண்டும். குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா். அவா்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT