கருணாநிதி நினைவு நாள்: திமுக மாவட்டச் செயலா் வேண்டுகோள்
தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு நாளையொட்டி திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகளின் முன்பு அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை
தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு நாளையொட்டி திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகளின் முன்பு அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்த திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக திமுக மத்திய மாவட்டச் செயலா் மு. அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான சனிக்கிழமை (ஆக. 7) திருநெல்வேலி மத்திய மாவட்டத்திலுள்ள திமுக நிா்வாகிகள், மூத்த முன்னோடிகள், தொண்டா்கள் என அனைவரும் அவரவா் வீட்டு முன்பு கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செய்திட வேண்டும்.
கரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியுடன் தொண்டா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.