முகப்பு
தமிழ்நாடு

கோபியில் 9-ஆவது முறையாக செங்கோட்டையன் போட்டி: விசில் சின்னத்தில் முதல்முறை!

கோபியில் விசில் சின்னத்தில் முதல்முறையாகப் போட்டியிடும் செங்கோட்டையன்!

Updated On : 29 மார்ச், 2026 at 8:13 AM
- Sengottaiyan to file nomination from Gobichettipalayam; asserts TVK ready for 2026 TN poll battle
பகிர்:

கோபியில் முதல்முறையாக விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார் செங்கோட்டையன்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 29) வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னையில் பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் களம் காணுகிறார். பல்வேறு வாக்குறுதிகளுடன் தவெக தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது.

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் தமிழக முன்னாள் அமைச்சரும் அரசியலில் எம்ஜிஆர் காலத்திருந்தே களம் கண்டு வரும் மூத்த தலைவருமான கே. ஏ. செங்கோட்டையன் இம்முறை தமிழக வெற்றிக் கழகம் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார். அவர் அத்தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் (கோபி) 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திலிருந்து விசில் சின்னத்துக்கு மாறி போட்டியிடுவது அவருக்குச் சாதகமா பாதகமா என்பதற்கான பதில் வாக்கு எண்ணிக்கை நாளான மே. 4-இல் தெரிய வரும்.

summary

Sengottaian will contest in Whistle symbol for the very first time in his longstanding political carreer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.