தவெக வேட்பாளர்களில் மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்தவர்கள் யார்?
மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் வேட்பாளர்கள் ஆனவர்கள் குறித்து...
பிற கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களில் சிலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். இது தவிர 232 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். இதில், பெரும்பாலும் அக்கட்சியின் செயலாளர்களே இடம் பிடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் மாற்றுக் கட்சியிலிருந்து தங்களைத் தவெகவில் இணைந்துக்கொண்ட சிலரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
முக்கியமாக, ஆதவ் அர்ஜுனா (விசிக) வில்லிவாக்கம், செங்கோட்டையன் (அதிமுக) கோபிச்செட்டிபாளையம், சத்யபாமா (அதிமுக) திருப்பூர் வடக்கு, சிடி நிர்மல்குமார் (அதிமுக) திருப்பறங்குன்றம், வி. எஸ். பாபு (அதிமுக) கொளத்தூர், கு. ப. கிருஷ்ணன் (அதிமுக) லால்குடி, ஜேசிடி பிரபாகர் (அதிமுக) ஆயிரம் விளக்கு, செல்வம் (காங்கிரஸ்) சேப்பாக்கம், ஸ்ரீதர் (அதிமுக) வால்பாறை, ரெட்டியார்பட்டி நாராயணன் (அதிமுக) நாங்குநேரி, ஜெகதீச பாண்டியன் (நாம் தமிழர்) சங்கராபுரம், திருப்பதி (அதிமுக) திருப்பத்தூர், லோகேஷ் ( அதிமுக - முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்) ராசிபுரம், தூசி மோகன் (அதிமுக) செய்யாறு, நவல்பட்டு விஜி (திமுக) திருவெறும்பூர், கவிதா ராஜேந்திரன் (அதிமுக) ஜெயங்கொண்டம், கே. எம். சரிஃப் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி) புதுக்கோட்டை, ஹாரூண் ரஷீத் (மனித நேய ஜனநாயக கட்சி) மயிலாடுதுறை, முஸ்தஃபா (தமிழ்நாடு முஸ்லீம் லீக்) மதுரை மத்திய, சுப்ரமணியன் (அதிமுக) கந்தர்வகோட்டை ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.
Some of those who left other parties and joined the Thaweka have been announced as candidates.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.