முகப்பு
தமிழ்நாடு

மாற்று கட்சிகளிலிருந்து வந்தோருக்கும் சீட் கொடுத்த விஜய்!

மாற்றுக் கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்தோரும் வேட்பாளர்களாக அறிவிப்பு

Updated On : 29 மார்ச் 2026, 1:51 pm IST
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு - பிடிஐ
பகிர்:

மாற்றுக் கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தோருக்கும் வேட்பாளர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது.

மேலும், மாற்று கட்சிகளிலிருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்தோரும் வேட்பாளர்களாகும் வாய்ப்பை விஜய் வழங்கியுள்ளார்.

Advertisement

அந்த வகையில், காங்கிரஸில் இருந்த செல்வம், மார்ச் 25 ஆம் தேதியில் விலகி, மார்ச் 26-ல் தவெகவில் இணைந்தார். இந்த நிலையில், அவரை சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். இதே தொகுதியில்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகிறார்.

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு - பிடிஐ

இதேபோல, சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்ஜிஆர் அண்ணா திமுகவிலிருந்து விலகி, தவெகவில் இணைந்த ரஞ்சித் குமார், காஞ்சிபுரத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், செய்யாறு தொகுதியில் அதிமுக சீட் வழங்காததால், அங்கிருந்து விலகி தவெகவில் இணைந்த தூசி மோகனுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் நான்குநேரி தொகுதியை அமமுக-வுக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு நான்குநேரி தொகுதியையே தவெக ஒதுக்கியுள்ளது.

முன்னதாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனுக்கும் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

summary

TN Assembly Election 2026: TVK Vijay Allots Seats Even to Those Who Joined from Other Parties!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.