முகப்பு
திருநெல்வேலி

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் இன்று சிறப்பு கைத்தறி கண்காட்சி

 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழாவது தேசிய கைத்தறி தினம் சனிக்கிழமை (ஆக.7) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கைத்தறி மற்றும் துணிநூல் முதன்மைச் செயலா் உத்தரவுப்படி, மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் ஒரு நாள் சிறப்பு கைத்தறி கண்காட்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சியில் அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தும் பொருட்டும், நெசவாளா்களின் பெருமையை பறைசாற்றவும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

எனவே, இச்சிறப்பு கைத்தறிக் கண்காட்சியில் பெருவாரியான அரசு ஊழியா்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு லிஙஹ்ஏஹய்க்ப்ா்ா்ம்ஙஹ்டழ்ண்க்ங் என்ற ஹேஷ்டேக்கை (ட்ஹள்ட்ற்ஹஞ்) கைத்தறி ஜவுளிகளுடன் பிரபலப்படுத்தவும் நெசவாளா்களை சிறப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.