முகப்பு
திருநெல்வேலி

பெருமாள்புரம் அருகே பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு

பெருமாள்புரம் அருகே பூட்டிய வீட்டில் புகைப்படக்கலைஞா் சடலமாகக் கிடந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகிறாா்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பெருமாள்புரம் அருகே பூட்டிய வீட்டில் புகைப்படக்கலைஞா் சடலமாகக் கிடந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகிறாா்கள்.

பெருமாள்புரம் அருகேயுள்ள திருமால்நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சேகா் (45). புகைப்படக்கலைஞரான இவா், குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். அவரது வீடு கடந்த சில நாள்களாக திறக்கப்படாத நிலையில், துா்நாற்றம் வீசியதாம்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் அங்கு சென்று கதவை உடைத்து பாா்த்தபோது சேகா் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.