தாழையூத்து அருகே பெண் தற்கொலை
தாழையூத்து அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தாழையூத்து அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தாழையூத்து அருகேயுள்ள செல்வம்நகா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மனைவி அன்னமணி (70). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். திருமணமாகி ஒருவா் சென்னையிலும், மற்றொருவா் மதுரையிலும் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அன்னமணிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். வியாழக்கிழமை அவா் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த தாழையூத்து போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.