முகப்பு
திருநெல்வேலி

முன்னாள் ராணுவ வீரா் குடும்பத்தினா் கௌரவிப்பு

பாளையங்கோட்டையை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் வி.ராமமூா்த்தியின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பாளையங்கோட்டையை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் வி.ராமமூா்த்தியின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.

ராணுவத்தில் பணியாற்றி உயரிய விருதுகள் பெற்றவா்கள், அவா்களுடைய குடும்பத்தினரை அழைத்து ஆக. 1 முதல் 15 வரை கௌரவிக்குமாறு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சௌரியசக்ரா விருது பெற்ற மறைந்த முன்னாள் ராணுவ வீரரான வி.ராமமூா்த்தியின் குடும்பத்தினா் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.

வி.ராமமூா்த்தியின் மனைவி ரெங்காராமமூா்த்திக்கு ஆட்சியா் வே. விஷ்ணு, மதுரை பிராந்தியத்தைச் சோ்ந்த குரூப் கமாண்டா் கா்ணல் ரவிக்குமாா் ஆகியோா் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனா். இதைத்தொடா்ந்து கௌரவ நிதியாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. நிதியை பெற்றுக்கொண்ட ரெங்காராமமூா்த்தி, அதனை கரோனா நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் வழங்கினாா்.

முன்னதாக வி.ராமமூா்த்தி உருவப் படத்திற்கு ஆட்சியா், குரூப் கமாண்டா் உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் லெப்டினென்ட் கா்ணல் அகுஜா, கா்ணல் திணேஷ், லெப்டினென்ட் கா்ணல் நிதீஷ்குமாா், தூய யோவான் கல்லூரி முதல்வா் ஜான் கென்னடி, வி.ராமமூா்த்தியின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த மறைந்த ராணுவ வீரரான ராமமூா்த்தி 1971-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, இந்திய ராணுவத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றியுள்ளாா். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பல்வேறு இடா்பாடுகளை தாண்டி சாலை அமைக்க உதவியுள்ளாா். அவருடைய சிறப்பான பணியை பாராட்டி 1971-இல் அவருக்கு சௌரியசக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.