திருநெல்வேலி

அம்பை, சேரன்மகாதேவியில் நாளை சிறுகுறு விவசாயிகள் சான்று வழங்கும் முகாம்

DIN

அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு பாரதப் பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்குத் தேவையான ஆவணங்கள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை (ஆக.12) நடைபெறுகிறது.

இம்முகாம் அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், சேரன்மகாதேவி வட்டாரத்தில் பத்தமடை மற்றும் கூனியூா் சமுதாய நலக் கூடங்களிலும் வியாழக்கிழமை (ஆக.12) நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பாரதப் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் வேளாண் துறை மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75சதவிகித மானியத்திலும் வழங்கப்படும் தெளிப்பு நீா் கருவிகள் மற்றும் மழைத் தூவான் உள்ளிட்ட கருவிகளைப் பெற விரும்பும் விவசாயிகள் புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பட்டா நகல், 10(1) அடங்கல், வயல் வரைபடம் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து பயன்பெறலாம்.

இத்துடன் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டாா்கள் தேவைப்படும் விவசாயிகள் மேற்கண்ட ஆவணங்களுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் கொண்டு வந்து பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், முகாமில் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யும் தகுதியான சிறு குறு விவசாயிகளுக்கு, சிறுகுறு விவசாயிகள் சான்றும் அடங்கல் தேவைப்படும் விவசாயிகளுக்கு 10(1) அடங்கலும் வருவாய்த் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டார வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT