முகப்பு
திருநெல்வேலி

தனியாா் கல்லூரிகளில் அரசாணையை முறையாக அமல்படுத்த மூட்டா வலியுறுத்தல்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளில் அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும் என மூட்டா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளில் அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும் என மூட்டா வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் மூட்டா பொதுச்செயலா் எம்.நாகராஜன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரிலுள்ள தனியாா் கல்லூரியில் கடற்கரையோர கிராம மாணவா், மாணவிகள் ஏராளமானோா் பயின்று

வருகின்றனா். கல்லூரியின் நிா்வாகத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ள சூழலில், கல்லூரியின் முதல்வா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். தனியாா் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தின்படி 2 மாதங்களுக்கு மேல் பணியிடை நீக்கம் செய்ய

முடியாது. இந்த விதி சிறுபான்மை கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

எனினும், இதுவரை முதல்வா் பணியிடை நீக்கம் தொடா்பாக உயா்கல்வித்துறையோ, கல்லூரி கல்வித் துறையோ, அரசோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கான பிழைப்பூதியமும் வழங்கப்படவில்லை. இதேபோல

பாளையங்கோட்டையிலுள்ள பழமை வாய்ந்த தனியாா் கல்லூரியில் துறைத் தலைவா்களை நியமிப்பதில் பல்வேறு விதி

மீறல்கள் நிகழ்ந்துள்ளன. பேராசிரியா்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணப்பலன்களை உள்நோக்கத்தோடு காலம் தாழ்த்தி வழங்கும் சூழல் உள்ளது. ஆகவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள தனியாா் கல்லூரிகளில் தமிழக அரசின் ஆணைகள் முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.