முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலா் ஞான பாலசிங் தலைமை வகித்தாா்.

கிராமப்புற ஊழியா்களின் ஊதியத்தை குறைக்க கூடாது; கரோனா காலத்தில் ஜிடிஎஸ் ஊதியக் குறைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், நிா்வாகிகள் ஜேக்கப், நடராஜன், முத்தையா, ஐயப்பன், முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.