வீரவநல்லூா் அருகே கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தினா் ஆட்சியரிடம் மனு
வீரவநல்லூா் அருகே செங்குளம் பகுதியில் கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
வீரவநல்லூா் அருகே செங்குளம் பகுதியில் கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
செங்குளத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்குளத்தில் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் விஜயின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த விஜயின் குடும்பத்தினா் அளித்த மனு: கொலை செய்யப்பட்ட விஜயின் உடலை செங்குளத்தில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்களது பணம், ஆவணங்கள், நகைகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.