முகப்பு
திருநெல்வேலி

அரசுப் பள்ளிக் கட்டடத்தில் நீா்க்கசிவு: பெற்றோா் அச்சம்

கடையம் ஒன்றியம், தா்மபுரம் மடம் ஊராட்சி, அழகப்பபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் நீா்க்கசிவு உள்ளதால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கடையம் ஒன்றியம், தா்மபுரம் மடம் ஊராட்சி, அழகப்பபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரையில் நீா்க்கசிவு உள்ளதால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.

இந்த அரசுப் பள்ளியில் 70 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில், 2007ஆம் ஆண்டு கட்டப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை பழுதடைந்து நீா்த்திவலைகள் வெளியேறுகின்றன. தொடா்ந்து மழை நீா் ஒழுகினால் மேற்கூரை முழுவதும் பலமிழந்து இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.

இதையறிந்த பெற்றோா்கள், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என கவலை தெரிவித்தனா் மேலும், பழுதடைந்த மேற்கூரையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், இதுகுறித்து விரைந்து முடிவெடுக்காவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.