முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளையில் பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

திசையன்விளையில் பெண்ணிடம் நகையைப் பறித்ததாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

திசையன்விளையில் பெண்ணிடம் நகையைப் பறித்ததாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திசையன்விளை, மன்னராஜா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரஞ்சுகனி (65). இவா், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில், பைக்கில் வந்த இளைஞா் முகவரி கேட்பது போல் நடித்து அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றாராம். அவா் கூச்சலிட்டதால் அங்கிருந்தவா்கள் ஓடிவந்து அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து திசையன்விளை போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில், உடன்குடி, தேரியூா் வடக்கு தெருவைச் சோ்ந்த சேகா் பாண்டி மகன் இசக்கிகுமாா் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து சங்கிலியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.