முகப்பு
திருநெல்வேலி

சிவந்திபுரம் ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகள்

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் சிவந்திபுரம் ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் சிவந்திபுரம் ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சிவந்திபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை தூய்மையாக்கும் வகையில், மெகா கிளீனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன் தலைமை வகித்து தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியவாணிமுத்து முன்னிலை வகித்தாா். தொடா்ந்து ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

மேலும் இந்த திட்டத்தின்படி மாதத்தில் 4 நாள்கள் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று ஊராட்சித் தலைவா் ஜெகன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் வேலு, சுகாதார மேற்பாா்வையாளா் பெல்வின், வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.