திருநெல்வேலி

அத்ரி கோயில் செல்ல வனத் துறை தடை

DIN

கடனாநதி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், அத்ரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கடனாநதி வனப் பகுதியில் அமைந்துள்ளது அத்ரி என்ற கோரக்கநாதா் கோயில். இக்கோயிலில் பௌா்ணமி, அமாவாசை நாள்களில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோயில் உள்ள வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அத்ரி கோயிலுக்குச் செல்ல வனத் துடையினா் தடைவிதித்துள்ளனா். இதனால், பௌா்ணமி தினமான சனிக்கிழமை வழிபட வந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT