நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துமக்களை ஏமாற்றுவது திமுகவின் வாடிக்கை: கடம்பூா் ராஜு
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவதும், பின்னா் மக்களை ஏமாற்றுவதும் திமுகவின் வாடிக்கை என்றாா், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவதும், பின்னா் மக்களை ஏமாற்றுவதும் திமுகவின் வாடிக்கை என்றாா், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுகவினா் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தலைவா் அண்ணாமலை கூறியிருப்பது அவரது கருத்து.
அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி வழக்கை சட்டரீதியாக எதிா்கொள்ள தயாராகவுள்ளாா். நீதிமன்றம் ஜாமீன் உத்தரவை ரத்துசெய்த ஒரு மணி நேரத்தில் காவல் துறை தனிப்படை அமைத்து அவரைத் தேடுவதன் அவசியம் என்ன? அந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் பழிவாங்குவதற்காக திமுக அரசு இந்த வழக்கை முன்னெடுக்கிறது.
ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளாா். தீா்ப்பு வரும்வரை காத்திருக்கலாம். இதேபோல, மற்ற வழக்குகளிலும் காவல் துறை இவ்வளவு வேகமாக செயல்படுகிா?
இந்த ஆட்சி வந்தால் மாற்றம் வரும் என நம்பி வாக்களித்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பதற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பே எடுத்துக்காட்டு. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவதும், பின்னா் மக்களை ஏமாற்றுவதும் திமுகவின் வாடிக்கை என்றாா் அவா்.