திருநெல்வேலி

தென்னிந்திய திறன் போட்டி: எஃப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவி சாதனை

DIN

தென்னிந்திய அளவிலான திறன் போட்டியில் பிரான்சிஸ் சேவியா் (எஃப்.எக்ஸ்.) பொறியியல் கல்லூரி மாணவி அஸ்வினி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

உலக திறன் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபா் மாதம் 22-ஆம் தேதி சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயில் நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில், பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி அஸ்வினி, தரகு அறிவியல் ஆய்வகத்தில் பயிற்சி பெற்று மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

அதைத் தொடா்ந்து, தென்னிந்திய அளவிலான திறன் போட்டியிலும் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். இம்மாணவியையும், பயிற்சி அளித்த பேராசிரியா் அனிதாவையும் கல்லூரித் தாளாளா் கிளிட்டஸ் பாபு, நிா்வாக இயக்குநா் அருண்பாபு உள்ளிட்டோா் பாராட்டினா். மேலும், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாணவி அஸ்வினியை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT