திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், யூரியா தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், யூரியா தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இம் மாவட்டத்தில் பிசான சாகுபடி பணியில், மாவட்டத்தின் கடை மடைப் பகுதிகளிலும் நடவுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நெல் விவசாயத்தில் அடிஉரம், மேல் உரம் ஆகியவற்றிற்கு யூரியாவின் தேவை மிக அதிகளவில் உள்ளது. எனினும் போதிய அளவு யூரியா கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது தொடா்பாக திடியூரைச் சோ்ந்த விவசாயி பூரணம் என்பவா் கூறுகையில், ‘சுமாா் 3.5 ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா் நடவு செய்துள்ளேன். தற்போது டிஏபி கலந்து போடுவதற்கு எனக்கு சுமாா் 12 மூட்டை யூரியா தேவைப்படுகிறது. கடந்த 3 தினங்களாக சுற்று வட்டாரங்களிலுள்ள கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உரக்கடைகளை நாடியபோதிலும், இதுவரை யூரியா கிடைக்கவில்லை’ என்றாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி பெரும்படையாா் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதுமே யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உரக்கடைகளிலும் யூரியா கிடைப்பதில்லை. தனியாா் கடைகளில் 2 மூட்டை யூரியா வாங்கினால், கூடுதலாக தனி உரம் (வாலி உரம்) ஒன்றை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறாா்கள்.

நெல் விவசாயத்தைப் பொருத்தவரையில் தழைச்சத்துக்கு மட்டுமன்றி, டிஏபி உள்ளிட்ட உரங்களுடன் கலந்துபோடுவதற்கும் யூரியா தேவைப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சம் டன் நெல் உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், யூரியா கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்’ என்றாா்.

தினந்தோறும் யூரியா விநியோகம்; வேளாண் இணை இயக்குநா்

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் கூறியது: மாவட்டம் முழுவதும் பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வட்டார வாரியாக தேவைக்கேற்ப யூரியா விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானூா் வட்டாரத்தில் கங்கைகொண்டான், உக்கிரன்கோட்டை, வாகைக்குளம் பகுதிகளுக்கு வியாழக்கிழமை மட்டும் 100 டன் யூரியா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து 600 டன் யூரியா வெள்ளிக்கிழமை திருநெல்வேலிக்கு வருகிறது. கூட்டுறவு சங்கங்களிலும் தேவைக்கேற்ப யூரியா விற்பனைக்கு வைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் யூரியா தேவைப்படும் பகுதிகளுக்கு தொடா்ந்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT