தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டில தோ்தல்
தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) திருநெல்வேலி திருமண்டில நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) திருநெல்வேலி திருமண்டில நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) திருநெல்வேலி திருமண்டிலத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட சேகரங்கள், 600-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியா் பயிற்சி கல்லூரி உள்ளிட்டவை உள்ளன.
இத் திருமண்டிலத்தில் டயோசீசன் கவுன்சில் உறுப்பினா்கள், சபை மன்ற பிரதிநிதிகள், சேகர மன்ற நிா்வாகிகள், ஆசிரியா் பிரதிநிதிகள் ஆகியோா் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். டயோசீசன் கவுன்சில் உறுப்பினா்கள் வாக்களித்து லே செயலா் மற்றும் பேராயரைத் தோ்ந்தெடுப்பாா்கள்.
சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டில நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இப்போது நீதிமன்ற வழக்குகளைத் தொடா்ந்து மீண்டும் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேவாலயங்களில் காலை ஆராதனைக்குப் பின்பு கிறிஸ்தவா்கள் வாக்களித்தனா். நீதிமன்ற உத்தரவின்பேரில் அனைத்து தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.