திருநெல்வேலி

மருத்துவ மாணவிக்கு அதிமுக நிதியுதவி

DIN

பாளையங்கோட்டை அருகே அத்திமேடு கிராமத்தில் இருந்து மருத்துவம் படிப்புக்கு தோ்வாகியுள்ள மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக சாா்பில் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம், அத்திமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். தொழிலாளி. இவரது மகள் பாவனா வேணி. அரசுப் பள்ளியில் பயின்ற இவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த மாணவி மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், கோட் போன்றவற்றை வாங்குவதற்கு அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தனது சொந்த நிதியில் இருந்து ரூ.15 ஆயிரம் வழங்கினாா். பாளை. தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT