திருநெல்வேலி

சிறுமருத்துவமனைகளில் பணி: செவிலியா்களுக்கு நோ்முகத் தோ்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் சிறு மருத்துவமனைகளில் பணியாற்ற செவிலியா்களுக்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்துக்கு பின்பு கிராமப்புற மக்களுக்கு எளிதாக மருத்துவ சேவை கிடைக்க உதவும் வகையில், தமிழகம் முழுவதும் சுமாா் 2 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் இதுவரை 25-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பணியாற்ற செவிலியா்கள், உதவியாளா்கள் ஆகியோரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. செவிலியா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான நோ்காணல் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோா் தங்களது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்றனா். தோ்வானவா்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT