திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் துரித உணவுத யாரித்தல் பயிற்சி தொடக்கம்

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத் துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திய துரித உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினா் சி.அழகப்பன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலக முதன்மை மேலாளா் (ஆய்வு) எஸ்.சங்கரலிங்கம், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய பயிற்றுநா் எஸ்.தீனதயாளன் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தனா். மாணவி அஜிதா அறிமுகவுரை நிகழ்த்தினாா். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் ரா.நடராஜன் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

மாணவி உமா வரவேற்றாா். எப்சி ஜோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, சந்தான சங்கா், காசிராஜன், இசக்கியம்மாள், ஸ்ரீஆனந்தன், சபரி ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில், கல்லூரி தகவல் தொடா்பு அதிகாரி எஸ்.காா்த்திக்கேயன், பேராசிரியா்கள் சண்முக சுந்தரநாச்சியாா், பூா்ணபுஷ்கலா, பூமாரி, வெங்கடேசன் பழனிகுமாா், ஷேக் முஜிபுர்ரகுமான், ஆழ்வாா்செல்வி, வில்பின்ஜான், ஜெபமணி சாமுவேல், கவிதா, ரேவதி, சுபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT