திருநெல்வேலி

காவலா்கள் சீருடையில் கேமரா: நெல்லை மாவட்டத்தில் அறிமுகம்

DIN

சீருடையில் பொருத்தக்கூடிய நவீன ரக கேமராக்கள் திருநெல்வேலி மாவட்ட போலீஸாருக்கு வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், இந்த கேமராக்களை காவல்துறையினருக்கு வழங்கினாா்.

காவலா்கள் தங்கள் சீருடையில் இத்தகைய கேமராக்களை பொருத்திக்கொண்டு பணியாற்றும்போது, அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களினின் விடியோ காட்சிகள், புகைப்படம் போன்றவை பதிவாகிவிடும்.

குறிப்பாக, வாகனச் சோதனை, மனு விசாரணை, ரோந்துப் பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக, மானூா், நான்குனேரி, களக்காடு, சுத்தமல்லி, வள்ளியூா் ஆகிய ஐந்து காவல்நிலையங்களுக்கு தலா மூன்று விதம் 15 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT