புதிய கல்விக் கொள்கை: மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்து கேட்கப்படவில்லை
புதிய கல்விக் கொள்கை விஷயத்தில் மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்து கேட்கப்படவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை விஷயத்தில் மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்து கேட்கப்படவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு, பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது: அனைவரும் காலை வணக்கம். இங்கு உங்களை பார்க்கிறபோது, என்னுடைய கல்லூரி நாள்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த தேசத்தின் எதிர்காலத்தை இங்கு பார்க்கிறேன்.
குறிப்பாக ஏராளமான பெண்கள், இளைஞர்கள் இருக்கிறீர்கள்.
நம்முடைய கல்வி முறை என்பது நம்முடைய மாணவர்களுக்காக நம்முடைய ஆசிரியர்களால் நடத்தப்படுவதாகும். அது தொடர்பாக புதிதாக எந்த கொள்கையை உருவாக்குவதாக இருந்தாலும், மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்தைக் கேட்டு உருவாக்க வேண்டும்.
ஆனால், புதிய கல்விக் கொள்கை விஷயத்தில் துரதிருஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்து கேட்கப்படவில்லை. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்களிடம் கருத்து கேட்டு புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவது சரியானதாக இருக்காது என்றார்.