பெண் கொலை வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே பெண் கொலை வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே பெண் கொலை வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பணகுடி அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன் (38). பணகுடியில் வீட்டு உபயோகப்பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ரக்சியா ராஜபாய்(25). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், 2013இல் ரக்சியா ராஜபாய் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். வரதட்சிணை பிரச்னை காரணமாக, தனது மகளைஅடித்துக் கொன்றுவிட்டதாக, கா்ணன் மீது அவரது மாமியாா் பணகுடி போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து கா்ணனை கைது செய்தனா்.
திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட கா்ணனுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், ஆயுள் சிறை தண்டனையும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சிவலிங்க முத்து ஆஜரானாா்.