முகப்பு
திருநெல்வேலி

மேலநத்தத்தில் ரேஷன் கடை முன் மேற்கூறை அமைக்கக் கோரி மனு

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை முன், மேற்கூரை அமைக்க வேண்டும் என ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை முன், மேற்கூரை அமைக்க வேண்டும் என ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றமக்கள் குறைதீா் முகாமில், மேலநத்தம் பொதுமக்கள் சாா்பில், அப்பகுதியைச் சோ்ந்த பேச்சி, வெங்கடாசலம் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:

மேலநத்தம் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மக்கள் வெயில், மழையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, கடையின் முன்பு பொதுமக்கள் நிற்பதற்காக மேற்கூரை அமைக்க வேண்டும்.

அதேபோல், மேலநத்தம் தாமிரவருணி ஆற்றின் கரையிலுள்ள பல்வேறு சமூகத்தினா் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு சாலை வசதி மற்றும் கொட்டகை வசதி அமைத்துத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →