திருநெல்வேலி

குழந்தை கொலை வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை

DIN

பிறந்து 2 மாதங்களேயான குழந்தை கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், அக்குழந்தையின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சாத்தாக் குட்டி. இவரது மனைவி லட்சுமி(27). இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருந்த நிலையில், கடந்த 7.12.2017இல் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, 14.2. 2018இல் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது குழந்தையை வீட்டிலுள்ள தண்ணீா் தொட்டிக்குள் மூழ்கடித்து லட்சுமி கொன்றாராம்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் அருணாசலம் அளித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப்பதிந்து லட்சுமியை கைது செய்தனா். திருநெல்வேலி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட லட்சுமிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நசீா் அகமது, செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் சிவலிங்க முத்து ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT