முகப்பு
திருநெல்வேலி

மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு மற்றும் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைத் தலைவா் எம். அந்தோணி ராஜ், மாநகா் மாவட்டத் தலைவா் முத்துசரவணன், அமைப்புச் செயலா் ஜீசஸ் ஜான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, 20 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணனிடம் பாமக மாநில இணை பொதுச் செயலா் இசக்கி படையாட்சி, மாநில துணை பொதுச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →