நெல்லையில் இரவில் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி கோரி மனு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வணிக நிறுவனங்கள் இரவு இயங்க அனுமதி கோரி மாநகர காவல் துணை ஆணையா் சரவணனிடம் மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வணிக நிறுவனங்கள் இரவு இயங்க அனுமதி கோரி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணனிடம் மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து சங்கத் தலைவா் என்.முருகன், செயலா் க.ராமகிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து அளித்த மனு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொருள்கள் வாங்க வருவா் என்பதால், பொதுநலன் கருதி, ஜன. 12ஆம் தேதி இரவு 2 மணி வரையும், ஜன.13ஆம் தேதி இரவு முழுவதும் வணிக நிறுவனங்கள் இயங்கிட அனுமதியும், பாதுகாப்பும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.