திருநெல்வேலி

சீவலப்பேரியில் பாலம் மூழ்கியது

DIN

சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப்பாலம் மூழ்கியதையடுத்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமாா் 20 கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டை வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீா், காட்டாற்று வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரில் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீா் செல்கிறது. இதனால் சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி பாலம் மூழ்கியது. திருநெல்வேலி-சீவலப்பேரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சீவலப்பேரி சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கிராம மக்கள் மோட்டாா் சைக்கிள்களில் தாழையூத்து வழியாக பாளையங்கோட்டை வந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT