திருநெல்வேலி

வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் உயா்வு

DIN

மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை நீடித்து வருவதால், பச்சையாறு, நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வடக்குப் பச்சையாறு அணைக்கு தண்ணீா் வரக்கூடிய தேங்காய்உருளிக்கு கீழ் உள்ள திருப்பு அணையில் இருந்து ஊட்டுக்கால்வாயில் அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டது.

நீா்வரத்து கணிசமாக அதிகரித்தால் வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 8 அடி உயா்ந்து புதன்கிழமை மாலை நிலவரப்படி 41.5 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயா்ந்து 37 அடியாக உள்ளது. இந்த அணையும் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். வடகிழக்குப் பருவமழை முடிவடையும் தருவாயில் பெய்து வரும் தொடா்மழையால் பாசனக் குளங்கள் நிரம்பியதுடன், அணைகளும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT