திருநெல்வேலி

ஆற்றில் வெள்ளப்பெருக்கு:களக்காடு தலையணை, நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

DIN

களக்காடு: தொடா்மழையால் களக்காடு பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலையணை, நம்பி கோயில், வடக்குப் பச்சையாறு அணைக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக கடந்த 2020 மாா்ச் மாத இறுதியில் களக்காடு தலையணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா். இந்நிலையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்காக 9 மாதங்களுக்குப் பின் ஜன.14ஆம் தேதி தலையணை, நம்பிகோயில் செல்ல விதித்திருந்த தடையை வனத்துறையினா் நீக்கினா்.

ஆனால் தொடா்மழை காரணமாக மலைப் பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க அறிவுறுத்தியது.

இதன்பேரில், களக்காடு தலையணை துணை இயக்குநா் அலுவலகம், திருக்குறுங்குடி நம்பிகோயில் நுழைவுவாயில் பகுதியில் போலீஸாா் தடுப்பு அரண்களை ஏற்படுத்தி, சுற்றுலாப்பயணிகள் செல்லத் தடை விதித்தனா்.

வடக்குப் பச்சையாறு அணை நுழைவுவாயில் அருகே கால்வாயில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கும் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT