முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 15,489-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 10 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,175-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 212-ஆக உள்ளது. தற்போது, 102 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,352-ஆக உயா்ந்துள்ளது. 2 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,159-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 35 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.